உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு வேட்டி சேலைக்கு பதில் ரூ. 1,000 வழங்கல்

ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு வேட்டி சேலைக்கு பதில் ரூ. 1,000 வழங்கல்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு, இலவச வேட்டி, சேலைக்கு பதில், தலா 1,000 ரூபாய், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் செய்திக்குறிப்பு; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 18 வயது பூர்த்தி அடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும், இத்திட்டத்தின் கீழ் தலா 1,000 ரூபாய் வீதம், நிதி உதவி வழங்கப்படுகிறது. புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 685 பயனாளிகளும், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த 24 ஆயிரத்து 778 பயனாளிகளும், ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 5 ஆயிரத்து 144 பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுகின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 607 பயனாளிகளுக்கு, 13 கோடியே 16 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை