உப்பளம் தொகுதியில் தார் பாய்கள் வழங்கல்
புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார் பாய்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் வழங்கினார். உப்பளம் தொகுதிட்பட்ட பகுதிகளில் பருவமழையால் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவியாக தார் பாய்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, ராஜி, ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.