மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
திருக்கனுார் : கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த இலவச டி.வி., வழங்கும் விழா நடந்தது.புதுச்சேரியில் 2004ம் ஆண்டு அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்த 23 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இதுவரையில் 18 பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.இதன் ஒருபகுதியாக, கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குபயன்படும் வகையில் இலவசமாக டி.வி., வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். ஆசிரியர் பரிமளா வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு கலந்து கொண்டு இலவச டி.வி.,யை பள்ளிக்கு வழங்கினார்.இதில், முனைவர் மோகன்ராஜ், பிரபாகரன், சத்தியமூர்த்தி, பாரதிராஜா, ஆசிரியர்கள் செல்வதாஸ், மோகன்ராஜ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவசுப்ரமணியன், பொற்செல்வி, ஜெயலலிதா, கல்பனா, பரணி, கயல்விழி, புவனேஸ்வரி, சம்பத், தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago