உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயண சீட்டு இல்லை என்றால் அபராதம் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை

பயண சீட்டு இல்லை என்றால் அபராதம் பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரிக்கை

புதுச்சேரி: டிக்கெட் இன்றி பயணித்தால் அபராதம் வசூலிக்கப்படும் என, பி.ஆர்.டி.சி., நிர்வாகம் எச்சரித்துள்ளது.பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;மாநில மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக பி.ஆர்.டி.சி., சார்பில், நகர, புறநகர மற்றும் தொலைதுார வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பி.ஆர்.டி.சி., பஸ்சில் பயணிக்கும் பயணிகள் பலர் கவனக்குறைவாகவோ அல்லது மறதியின்மை காரணமாக டிக்கெட் எடுக்காமலும், பல நேரங்களில் கண்டக்டரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெறாமல் பயணிப்பது தெரிய வருகிறது.அதனால், பி.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்கள் பயணத்திற்கான உரிய டிக்கெட் பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பரிசோதனைக்குரியது.பரிசோதனையின் போது டிக்கெட் இல்லாத பயணிகளிடம் போக்குவரத்து விதிகளின் படி டவுன் பஸ்களில் ரூ.25, புறநகர பஸ்களில் ரூ.50, தொலைதுார பஸ்களில் ரூ.250 அபராத தொகையாக வசூலிக்கப்படும். அபராதம் செலுத்தாதோர் மீது போக்குவரத்து விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, பயணிகள் உரிய பயண சீட்டுடன் பயணம் மேற்கொள்ளவும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை