உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் உண்ணாவிரதம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., நிறுவன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி நேற்று உண்ணாவிதர போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 276 ஓட்டுநர்கள், நடத்துனர்கள்பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனை கண்டித்து, பி.ஆர்.டி.சி.,யில் 2015ல் பணியில் அமர்த்தப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கூட்டுக்குழு சார்பில் சுதேசி மில் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.கூட்டுக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். போராட்டத்தில், பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபடயுள்ளதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை