மேலும் செய்திகள்
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது
30-Jul-2025
புதுச்சேரி : பணி நிரந்தரம் மற்றும் 7வது ஊதியக்குழு அமல்படுத்தக் கோரி பி.ஆர்.டி.சி ஊழியர்கள் 5வது நாளாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும், கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதற்கிடையே, முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உன்பாடு ஏற்படாததால், ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 5வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், பணிமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தை தொடர ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, வரும் 4ம் தேதி ஊர்வலமாக சென்று போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
30-Jul-2025