உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

நாகப்பட்டினம்: நாகையில், சமூக நலத்துறையின் கீழ் அன்னை சத்யா அரசு ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோரை இழந்த 10 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 55 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் வெளி நபர்கள் அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ்,42; ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் குழந்தைகள் நல குழுவிடம், 5 மாணவியர், சத்ய பிரகாஷ் தங்களிடம் பாலியல் ரீதியாக பேசுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா அளித்த புகாரின் பேரில், நாகை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சத்யபிரகாஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ