மேலும் செய்திகள்
நல்வழி காட்டியதற்கு நன்றி!
21-Dec-2024
பாகூர் : 'கிராமங்களை நோக்கி என்ற தலைப்பிலான 'மக்கள் குறை தீர்ப்பு முகாம்' நாளை கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;நல்லாட்சி வாரவிழாவை முன்னிட்டு, நாளை 22ம் தேதி கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'கிராமங்களை நோக்கி என்ற தலைப்பில் ' மக்கள் குறை தீர்வு முகாம்' நடைபெற உள்ளது.முகாமில், புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட சேவைகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சுகாதாரத்துறை, வேளாண் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, இந்தியன் வங்கி உள்ளிட்ட இதர தேசிய வங்கிகள், சட்டப் பணிகள் ஆணையம், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, தங்களின் துறை சார்ந்த மனுக்களை, மக்களிடமிருந்து பெற்றும், குறைகளை கேட்டறிந்தும் தீர்க்க உள்ளனர்.முகாமில், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
21-Dec-2024