உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.போலீஸ் எஸ்.பி., வம்சிதர ரெட்டி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். குறைதீர்வு கூட்டத்தில் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், பண்டசோழநல்லுார்,சூரமங்கலம், ஏரிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று குறைகளை எழுத்துப்பூர்வமாக எஸ்.பி.,யிடம் அளித்தனர்.மனுவினை பெற்றுக் கொண்ட எஸ்.பி., வம்சிதர ரெட்டி கூறுகையில், 'பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மீது, விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்' என்றார்.இந்த குறைதீர்வு கூட்டத்தில், திருக்கனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா, திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை