உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுநல அமைப்புகள் கலந்தாய்வு  கூட்டம்

பொதுநல அமைப்புகள் கலந்தாய்வு  கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்துவது தொடர்பாக பொதுநல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் சுப்பையா நினைவு இல்லத்தில் நடந்தது.நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தமிழர்களம் அழகர், நுகர் வோர் பாதுகாப்பு இயக்க முருகானந்தம், ஆம் ஆத்மி கணேஷ், புதுச்சேரி படைப்பாளர் இயக்க தமிழ்நெஞ்சன் உட்பட பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.கூட்டத்தில், பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் விளைவுகள் குறித்து துண்டறிக்கை தயார் செய்து அனைத்து தொகுதியிலும் வீடு வீடாக வழங்க வேண்டும்.பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்களிடம் கையேழுத்து இயக்கம் நடத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும். இத் திட்டத்தை கைவிடும் வரை தொடர்ச்சியாக மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றிட லோக்சபா தேர்தலை முன் வைத்து, மத்திய அரசுக்கு எதிராக பரப்புரை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ