மேலும் செய்திகள்
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழைபெய்து வந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று விடியற்காலை 4 மணிக்கு குளிர் காற்று வீசியது. சற்று நேரத்திற்கெல் லாம் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. புதுச்சேரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 3 செ.மீ., மழை பெய்திருந்தது. கனமழை எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. இதற்கான உத்தரவை அமைச்சர் கல்யாணசுந்தரம் பிறப்பித்தார். கனமழை காரணமாக பிள்ளைச்சாவடி கெங்கையம்மன் கோவில் வீதியில் கலைவாணி என்பவரது குடிசை வீடு இடிந்து விழுந்தது.
2 hour(s) ago