உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது

ஸ்டாலின் கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது

புதுச்சேரி : ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, புதுச்சேரி தி.மு.க.,வினர் காமராஜ் சிலை சந்திப்பில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மாநில அமைப்பாளர் ஜானகிராமன், துணை அமைப்பாளர்கள் எஸ்.பி. சிவக்குமார், ராஜாராமன், நந்தா சரவணன் எம்.எல்.ஏ., இளைஞரணி சிவா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் 70 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை