மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
1 hour(s) ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
புதுச்சேரி : 'மாணவர் சிறப்பு பஸ்கள் கிராமங்களுக்கு சரி வர வருவதில்லை' என செல்வம் எம்.எல்.ஏ., கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையைச் சார்ந்து பல கிராமங்கள் உள்ளன. இங்கு தலைமை டாக்டர் இல்லை. பெண் டாக்டர்களும் இல்லை. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் டாக்டர்களும் சரிவர வருவதில்லை. இங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கிராமப் புறங்களுக்கு மாணவர் சிறப்பு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை. இதைக் கண்காணிக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 'கோ ஜெனரேஷன்' அடிப்படையில், மின்சார உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வம் பேசினார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 10