உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கலை விழா துவக்கம்

புதுச்சேரி கலை விழா துவக்கம்

புதுச்சேரி:புதுச்சேரி கலை விழாவினை கவர்னர், முதல்வர் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து புதுச்சேரி கலைவிழா - 2025 தொடக்க நிகழ்ச்சி கடற்கரை காந்தி திடலில் நேற்று நடந்தது. விழாவினை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர். விழாவில் கலை பண்பாட்டு துறை செயலாளர் முகம்மது அசன் அபித், இயக்குனர் முரளிதரன், தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கலைவிழா புதுச்சேரி கடற்கரை, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திடல், நெட்டபாக்கம் சிவன் கோவில் திடல், பரிக்கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளி அருகிலும், காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடல் என, 5 இடங்களில் நடக்கிறது. இந்த கலைவிழா நாளை வரை 3 நாட்கள் தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கிறது. இதில் புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, கேரளா என, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான 1,200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்கள் மாநிலங்களில் சேர்ந்த கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஏற்பாடுகளை கலை, பண்பாட்டுத்துறை அதிகாரிகள் கஸ்தூரி ரங்கன், அருள்ராஜ், முகமது கலிபா, ஷியாம் சுந்தம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை