மேலும் செய்திகள்
சென்னை ஏர்போர்ட்டில் 13 விமான சேவை ரத்து
12-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரி- பெங்களூரு விமான பயணத்திற்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:புதுச்சேரி விமான நிலையம் வரும், 20,ம் தேதி முதல் 'இண்டிகோ' விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரில் இருந்து பகல் 12:20 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். இங்கிருந்து பகல் 12:40 மணிக்கு ஐதராபாத் புறப்பட்டு செல்கிறது. அங்கிருந்து மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. இங்கிருந்து மாலை 5:10 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும்.பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு வரும் முதல் விமானத்தில், 51 பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல, 17 பேர் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் செல்ல 33 பேரும், அங்கிருந்து புதுச்சேரிக்கு 52 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இது முதல் நாளுக்கு முன்பதிவு செய்யப்பட்டவை. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். ஐதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து மும்பை மற்றும் டில்லி போன்ற முக்கிய இடங்களுக்கு இண்டிகோவின் இணைப்பு விமானங்கள் இருப்பதால், நல்ல வளர்ச்சி ஏற்படும்' என்றார்.
12-Dec-2024