உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்

கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்

புதுச்சேரி : திருச்சி உட்பிரிவு அளவிலான இருநாள் கூடைப்பந்து போட்டி கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் துவங்கியது.கேந்திர வித்யாலா பள்ளி சார்பில் திருச்சி உட்பிரிவு அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு நாள் கூடைப்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின் துவக்க விழா நேற்று கோரிமேடு ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியை பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.14 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கிறது.இதில், திருச்சி, மதுரை, காரைக்குடி மற்றும் புதுச்சேரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் நடக்கவுள்ள மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்பர். முதுநிலை ஆசிரியை பத்மா நன்றி கூறினார்.போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி