உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லூரி மாணவிகள் துப்புரவு பணி

கல்லூரி மாணவிகள் துப்புரவு பணி

புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.புதுச்சேரி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, மக்கள் தொண்டு இயக்கம், பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் என்.எஸ்.எஸ்., மாணவிகள் இணைந்து நேற்று காலை துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க மாநில செயலாளர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். மகளிர் கல்லூரி முதல்வர் சவுந்தரவள்ளி துப்புரவு பணியைத் துவக்கி வைத்து, ஏழை மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினார்.நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் தொண்டு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப் பாளர் வாசுகி, திட்ட அலு வலர் அலமேலுமங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை