உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி கல்வியில் சிறந்து விளங்குகிறது

 புதுச்சேரி கல்வியில் சிறந்து விளங்குகிறது

புதுச்சேரி: பு துச்சேரி கல்வியில் சிறந்து விளங்குகிறது என, அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார். புதுச்சேரி பழைய துறைமுகத்தில் நடந்த நம்ம புதுச்சேரி நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது: சமுதாயத்தின் வளர்ச்சி என்பது கல்வி, சுகாதாரத்தை பொறுத்து அமையும். இந்த இரண்டும் நம் கண்கள் போன்றது. இதில் புதுச்சேரி சிறந்து விளங்குகிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமி, ஏற்படுத்திய வளர்ச்சி பணிகள் தான் காரணம். கல்வி, சுகாதாரம் இந்த இரு துறைகளிலும், மத்திய அரசு, புதுச்சேரிக்கு சிறப்பு பரிசு வழங்கி வருகிறது. இதையெல்லாம் நாம் பெறுவதற்கு அடிப்படை கல்வி, உயர்கல்வி தான் காரணம். அரசின் தகவலின்படி, புதுச்சேரியில் 61 உயர்நிலை கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. இது புதுச்சேரியின் கல்வி கட்டமைப்பின் சிறப்பை காட்டுகிறது. தேசிய அளவில் பெண்கள் படிக்கும் விகிதம் இருமடங்காக உள்ளது. தேசிய சராசரியை விட இங்கு இருமடங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்துகொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசு. மாணவர்கள் பல இடங்களில் சென்று அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கு, ஆண்டிற்கு 8 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்கள் வெளி வருகின்றனர். இந்த கல்வி வளர்ச்சி, இந்திய அளவில் பயனளிக்கூடிய மாநிலமாக புதுச்சேரியை மாற்றி உள்ளது. நமது தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ