உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசின் மின் துறைக்கு ஏ கிரேடு: மத்திய தரவரிசை பட்டியலில் அசத்தல்

புதுச்சேரி அரசின் மின் துறைக்கு ஏ கிரேடு: மத்திய தரவரிசை பட்டியலில் அசத்தல்

புதுச்சேரி: நாடு முழுவதும் மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய மின்துறை அமைச்சம் ரேங்கினைவெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரி மின் துறை 'ஏ' கிரேடுஅந்தஸ்தினை பெற்றுள்ளது. நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின் கடந்த 2023 -24ம் நிதியாண்டில் செயல் திறன் தொடர்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின் கட்டணம் வசூல், மின் வினியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை, மத்திய மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 52 அரசு மற்றும் தனியார் மின் வினியோக நிறுவனங்கள் 11 மின் துறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, 'ஏ பிளஸ், ஏ, பி, பி மைனஸ், சி, சி மைனஸ்' போன்ற கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி அரசின் மின் துறை 67.1 மதிப்பெண்ணுடன் ஏ கிரேடினை பெற்று அசத்தியுள்ளது. கடந்த 12-வது தரவரிசை பட்டியலில் 60.2 மதிப்பெண்ணுடன் பி கிரேட்டில் இருந்த புதுச்சேரி அரசின் மின் துறை இப்போது வெளியிடப்பட்டுள்ள 13-வது தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் மின் இழப்பு, 21.83 சதவீதத்தில் இருந்து, 17.75 சதவீதமாக குறைந்துள்ளது.மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, பில்லிங் போடும் திறன், 87.11 சதவீதத்தில் இருந்து, 89.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.மின் கட்டணம் வசூலிக்கும் திறன், 89.73 சதவீதத்தில் இருந்து, 92.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதேசமயம், ஒரு யூனிட் மின்சாரம் விற்பனை வாயிலாக கிடைத்த வருவாய் மற்றும் மின்சார செலவுக்கு இடையிலான இடைவெளி கடந்த 2022ம் ஆண்டில் மைனஸ் 1.05 ரூபாயாக இருந்தது. தற்போது இந்த இடைவெளி 0.69 பைசாக உள்ளது. 52 அரசு மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்களில் மத்திய தரவரிசை பட்டியலில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த, அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை' நிறுவனம், 99.80 மதிப்பெண்ணுடன், 'ஏ பிளஸ்' கிரேடு பெற்று, முதலிடத்தில் உள்ளது. 11 மின் துறை நிறுவனங்களுக்கான பட்டியலில் கேரளா மாநிலத்தில் டி.சி.இ.டி., 82.4 மதிப்பெண்ணுடம், டில்லியின் என்.டி.எம்.சி., மின் துறை நிறுவனம் 82 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 67.1 மதிப்பெண் பெற்று ஏ கிரேடுடன் 6-வது இடம் பிடித்துள்ளது புதுச்சேரி. புதுச்சேரிக்கு அடுத்த நிலையில் நாகலாந்து, மகாராஷ்ட்டிரா, லடாக், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. மிசோரம் 17.4 மதிப்பெண் சி கிரேடுடன் 11-வது இடத்தில் உள்ளது. தனியார்மய பிரச்னையில் சிக்கி தள்ளாடி வந்த மின் துறை, ஏ கிரேடு பெற்றுள்ளது மின் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை