புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலம்; சபாநாயகர் செல்வம் நம்பிக்கை
புதுச்சேரி; தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில், இணைய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.மத்திய அமைச்சர் முருகன் தலைமை தாங்கினார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைமை ஒருங்கிணைப்பாளர் புத்த சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.கருத்தரங்கில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் பேசியதாவது:தேசிய அளவில் இணைய சட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசும் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை, இணைய பாதுகாப்பை மையமாக கொண்ட புதிய விரிவான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. அச்சுறுத்தல்களை சமாளிக்க அதி நவீன கருவிகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற பரந்த இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.சைபர் கிரைமை எதிர்த்து போராடுவதில், தொடர்ச்சியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கூட்டு முயற்சி, நிலையான விழிப்புணர்வு, வலுவான சட்ட கட்டமைப்பு மூலம், சைபர் கிரைமால் ஏற்படும் அபாயங்களை குறைத்து, புதுச்சேரியில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.