மேலும் செய்திகள்
புதுச்சேரிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
01-Oct-2025
புதுச்சேரி, ; மாநில அந்தஸ்து கிடைக்காததால் புதுச்சேரி பின்தங்கியுள்ளதாக ஜெகத்ரட்சகன் எம்.பி., கூறினார். புதுச்சேரியில், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., கூறியதாவது: ஓரணியில் புதுச்சேரி என்பதே எங்கள் தாரக மந்திரம். புதுச்சேரி எப்போதும் தி.மு.க.,வின் கோட்டை. அதனை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 5 இடங்களில் துவக்கப்பட்டுள்ளது. இந்த பணி ஒரு மாதம் நடத்தப்படும். கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். எந்த கட்சி தொண்டராக இருந்தாலும் அவரும் நமது குடும்பத்தை சேர்ந்தவர் என வருந்த வேண்டும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். புதுச்சேரியில் தி.மு.க.,வுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. தி.மு.க., கூட்டணியை தலைவர் முடிவு செய்வார். புதுச்சேரியில் நாங்கள் தான் பெரிய கட்சி என யாரும் கூற முடியாது. அதை சொல்லும் தகுதி தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காங்., தலைவர் ராகுல் ஆகியோருக்குதான் உள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர். மாநில அந்தஸ்து கூட பெற முடியவில்லை. மாநில அந்தஸ்து அளித்தால் நாங்கள்கூட ஆதரவு தருகிறோம். ஒரு தொழிற்சாலை கூட புதுச்சேரிக்கு வரவில்லை. ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. காங்., மற்றும் தி.மு.க., தனித்தனியே போராட்டம் நடத்துவது வாடிக்கை. தேவைக்கேற்ப சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
01-Oct-2025