உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி பங்குச்சந்தையில் முதலீடு ரூ.12.30 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

போலி பங்குச்சந்தையில் முதலீடு ரூ.12.30 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

புதுச்சேரி: போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து, புதுச்சேரி நபர் மோசடி கும்பலிடம் ரூ.12.30 லட்சம் ஏமாந்தார்.புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்டவர், ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். அவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். அவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் பங்குச் சந்தையில் பல்வேறு தவணைகளாக 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் பெற்ற லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.சாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய, ஆன்லைனில் உணவு உரிமம் பெறவதற்காக தேடியுள்ளார். அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் உணவு உரிமம் பெற செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, அப்பெண் 36 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த நபர், 15 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். மூவரும் மோசடி கும்பலிடம் 12 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை