உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ரூ.24 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ரூ.24 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

புதுச்சேரி : போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, புதுச்சேரி நபர், ரூ. 24 லட்சம் இழந்துள்ளார்.புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.இதைநம்பி, விக்னேஸ்வரன் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக 24 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் பெறப்பட்ட லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை.அதன் பிறகே, போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், முத்தியால்பேட்டை சின்னயாபுரத்தை சேர்ந்த மனோஜ் 3 லட்சத்து 88 ஆயிரத்து 163, நெடுங்காட்டை சேர்ந்த 1 லட்சத்து 359, தட்டாஞ்சாவடியை சேர்ந்த சங்கீதா 71 ஆயிரத்து 951, சின்ன வாய்க்கால் தெருவை சேர்ந்த விமலா 35 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவசங்கர் 35 ஆயிரத்து 700, புதுச்சேரியை சேர்ந்த நிவேதிதா 22 ஆயிரத்து 200, பூராணங்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன் 15 ஆயிரம், வைத்திக்குப்பத்தை சேர்ந்த வெங்கடசுப்புலட்சுமி 19 ஆயிரத்து 134, நெல்லித்தோப்பை சேர்ந்த தமிழரசன் 40 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீதரன் 3 ஆயிரம் என 11 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 31 லட்சத்து 30 ஆயிரத்து 507 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை