உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: முதல்வர்

புதுச்சேரி போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: முதல்வர்

புதுச்சேரி : 35வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது.போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா வரவேற்றார். சபாநாயகர் செல்வம், அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினர்.சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;புதுச்சேரியில் சாலைகள் விரிவுப்படுத்த சிக்கல்கள் இருப்பதால், அதற்கான வாய்ப்பு குறைவு.சாலைவிபத்து உயிரிழப்பை தடுக்க சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.புதுச்சேரி மொத்தம் பரப்பு 26 கி.மீ., சுற்றளவு கொண்டது. இங்கு,வாகனத்தின் வேகத்தை குறைத்தால் மட்டுமே விபத்து மற்றும் உயிரிழப்பை குறைக்க முடியும்.தரமான சாலை அமைப்பதை பொதுப்பணி, உள்ளாட்சித்துறை உறுதி செய்ய வேண்டும்.தரமான சாலைகள் அமைப்பதால், விபத்து ஏற்படுவது குறைந்து வருகிறது.வேகத்தடைகள் மீது கருப்பு வெள்ளை நிறம் பூச வேண்டும். புதுச்சேரி போக்குவரத்தில் சில மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.விரிவுப்படுத்த முடியாத சாலைகள் வியாபார ஸ்தலமாக மாறி விடுகிறது. சாலையில் கடை வைத்துகொள்வதால், சாலை சுருங்கி விடுகிறது. கடைகளை சாலையில் வைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மாற வேண்டும் என பேசினார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, விதிமுறைகளை மீறும் வாகனங்கள் குறித்த புகார் அளிக்கும் 'டிராவிப் வியூ' என்ற செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை