கலந்தாய்வு கூட்டம்
புதுச்சேரி : பட்டம் பெற்ற ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் மாதாந்திர மருத்துவக் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஓமியோபதி மருத்துவர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை ஏற்படுத்தி நிரப்ப வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்துவது என தீர்மானிக்கப் பட்டது.கூட்டத்தில் சங்கத் தலைவர் முரளிதர், டாக்டர்கள் ரமேஷ், புவியரசன், சுபைதா, பர்வீன், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.