| ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : அகில இந்திய அனைத்து சமுதாய நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒய்ஸ்மேன் பள்ளியில் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. முதலியார்பேட்டை தொகுதி மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த முகாமை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் ஜெயந்தி, பூரணி, நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சையத் பாரூக் முன்னிலை வகித்தனர். டாக்டர் நெல்லியான் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். வி.சி.சி. நாகராஜ், பள்ளி முதல்வர் சரோஜாபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.