மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
54 minutes ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 8
பாகூர் : பஸ்சில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர் மனைவியின் நகைகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள், 47. இவர் புதுச்சேரி தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீவித்யா, 37. கடந்த 24ம் தேதி தன் இரண்டு குழந்தைகளுடன் புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ் மூலம் குருவிநத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பஸ், வழியில் பழுதாகி நின்றதால், வித்யா, வேறு பஸ் மூலம் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த போது, கைப்பையில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். வித்யா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் சப் இன்ஸ்பெக்டர் வாணிதாசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
54 minutes ago
2 hour(s) ago | 8