மேலும் செய்திகள்
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
4 hour(s) ago | 1
அயராது பாடுபடும் தேசிய பேரிடர் மீட்பு படை: பிரதமர் மோடி புகழாரம்
5 hour(s) ago | 1
இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
6 hour(s) ago | 1
புதுச்சேரி : 'புதுச்சேரியில் அதிகரிக்கும் கொலைகளால், பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை' என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை. இந்த ஆட்சி அமைந்த பின், 12க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அச்சமில்லாமலும், அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழும் சூழ்நிலை புதுச்சேரியில் இல்லை . புதுச்சேரியில் போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குற்றவாளிகளுடன் போலீசாருக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். போலீஸ் துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து கொண்டுள்ளனர். குண்டர் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. முதல்வர் ரங்கசாமி, 101 நாட்களுக்கு பின் நன்றி தெரிவித்துள்ளார். நன்றி கூறும் இடம் சட்டசபை அல்ல. அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க., அவைத் தலைவர் பாண்டுரங்கன், நகரச் செயலாளர் ரவீந்திரன் உடனிருந்தனர்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 1
6 hour(s) ago | 1