| ADDED : செப் 29, 2011 01:50 AM
புதுச்சேரி : தேர்தல் செலவு குறித்த கணக்குகளைக் குறிப்பிட்ட நாட்களில் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட தேதிகளில், தொழிலாளர் துறையிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் மூன்று முறை அவசியம் கணக்குகளைக் காண்பிக்க வேண்டும். வரும் 2ம் தேதி, 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், காந்தி நகர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் குமார் சஞ்சயிடம், வரும் 3ம் தேதி, 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கணக்குகளைக் காண்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளைக் காண்பிக்கத் தவறினால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள், தேர்தல் செலவினங்கள் சம்பந்தமான புகார்களை தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, தொழிலாளர் துறையின் இரண்டாம் தளத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேரிலும், மேற்கண்ட தேர்தல் செலவினப் பார்வையாளரிடம் புகார்களைத் தெரிவிக்கலாம்.மேலும், 94421 43808, 0413 2271283 ஆகிய மொபைல், தொலைபேசி எண்கள் மூலமாகவும், 0413 2279211 என்ற பேக்ஸ் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.