உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தாயரித்த குறும்படத்தினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, ஏராளமான விநாயகர் சிலைகள் ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன். அப்போது மலர்கள், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருட்களுடன் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களும் நீர்நிலைகளில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதோடு, நீர்நிலைகளையும் மோசமாக பாதிக்கக்கூடும். சிலை கரைப்புக்கு முன்னதாக, அலங்காரப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை முறையாகப் பிரித்து அகற்றுவது குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் 4 நிமிட விழிப்புணர்வு குறும்படம் தயாரித்தது. இந்த விழிப்புணர்வு குறும்படத்தை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் உறுப்பினர் செயலர் ரமேஷ் மற்றும் சுற்றுசூழல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உள்ள எல்.இ.டி., வாகனம் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இந்த விழிப்புணர்வு குறும்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை