மேலும் செய்திகள்
புதுச்சேரியில் 102.4 டிகிரி வெயில்
23-May-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 102.7 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று வெயிலின் அளவு 102.7 டிகிரியாக இருந்தது. புதுச்சேரியில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டி பதிவாவது இது 13வது முறையாகும். இதற்கு முன் நேற்று முன்தினம் நடப்பாண்டில் அதிகபட்சமாக வெயில் 104 டிகிரி பதிவானது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் அனல் காற்று வீசியது. இதனால் மதிய வேளையில் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
23-May-2026