உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; பள்ளியை சூறையாடிய மக்கள்!

புதுச்சேரி பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; பள்ளியை சூறையாடிய மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புனித ஜோசப் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம், பெற்றோர், உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ளது புனித ஜோசப் ஆங்கில மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர் மணிகண்டன், 6 வயதான மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெற்றோர் பரிசோதித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டனர். தகவல் அறிந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள், இன்று பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.பள்ளிக்கு வெளியே, தவளங்குப்பம் சந்திப்பில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலுார் சாலையில் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthik
பிப் 15, 2025 14:26

பள்ளியை சூறையாடி என்ன பிரயோஜனம்?அந்த ஆசிரிய காமுக கயவன் வீட்டை ஜே சி பி யோடு சென்று சூறையாட வேண்டும். அவன் பெயரில் உள்ள அனைத்து அரசு ஆவணங்களும் கல்விச் சான்று உட்பட தமிழக அரசால் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இவனுக்கு வக்காலத்து வாங்க வரும் வக்கீலின் பார்கவுன்சில் உறுப்பினர் பதிவு/அங்கிகாரம் பார்கவுன்சிலால் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இப்படி மட்டும் ஒருமுறை நடந்ததெனில் பிறகு ஒரு பயலும் வாலு ஆட்ட மாட்டான். நடக்குமா??


Kanns
பிப் 15, 2025 11:45

While Real& Grave Criminals Must be Legally Punished Fasttrack, All Such Goondas Involved in MobAttacks-Destruction Must be Crushed with Iron Hand-Arrest Without Bail Under Goondas Extracting Minm 08hour HardWorks for their JailStay & Convict them for their Grave Offences. No Mercy


அன்பே சிவம்
பிப் 15, 2025 10:12

தினம் தினம் விடியல் Today(15.02.25) - Pondicherry 1). ஆறு வயது பச்சிளம் குழந்தை. 2). ஆறு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புனித ஜோஸப் ஆங்கில மேல்நிலை பள்ளி ஆசிரியர் மணிகண்டன். 3). காரணம் ஆசிரியர் வேலை வயது வரம்பு. 4). அதாவது 35 வயது முதல் 40 வயதுவரை இடஒதுக்கீட்டு என வேலை இவர்களுக்கு கிடைக்கிறது. 5). அதுவரை கல்யாணம் காட்சி நடப்பது ஒன்றும் நடப்பது இல்லை. 6). பிறகும் சிலருக்கு கல்யாணம் நடப்பது இல்லை. 7). ஆசிரியர் சங்ககள் முழு ஆதரவு. 8). நீதிமன்றம் ஊம்மம் பதில் இல்லை மற்றும் ஓரு பிரயோஜனம் இல்லை. 9). ஜாதி மற்றும் அந்த சில வெளிநாட்டு சக்திகள் ஆதரவு. 10). அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக இவர்கள் செய்யும் குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது. 11). ஐரோப்பிய மற்றும் கல்ஃப் நாடுகளில் கண்டிப்பாக இந்த ஆசிரியருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும். உங்களுக்கு தெரியும். 12). பேசாமல் அரசாங்கம் அனுமதி வழங்கன குடிக்கர பார்கள் இருப்பது போல் விடுதிகளை அனுமதிக்கலாம் அல்லது அவர்களே திறந்துவிடலாம். அங்கே போய் இவர்கள் இச்சையை தீர்த்து கொள்ளலாம் நன்றி, அன்பே சிவம்.


D.Ambujavalli
பிப் 15, 2025 06:18

குருவை தெய்வமாகவும், நாளில் பெரும்பகுதி காப்பாளராகவும் எண்ணிப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் என்று எந்த நிலையில் குழந்தை திரும்புமா என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் போலிருக்கிறது எழுத்தறிவிக்கும் இறைவர் கழுத்தறுப்பாக மாறிவிடும் அவலம் என்று முடியும்? அங்கும் 'விடியல்' சேஷ்டைகள் ஆரம்பித்துவிட்டதா?


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 23:49

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆசிரியர்கள் திராவிடம் கற்று காமுகர்களாக மாறிவிட்டார்கள். தமிழகம் மற்றும் புதுசேரியில் ஆசிரியர்களுக்கு ஆர் எஸ் எஸ் பாடம் எடுக்க வேண்டும்.


BalaG
பிப் 14, 2025 23:18

சூடு சொரணை உள்ள மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வாழ்த்துக்கள்


Ramesh Sargam
பிப் 14, 2025 21:19

இந்த பாலியல் தொல்லை என்கிற வைரஸ் தமிழகத்திலிருந்து, புதுச்சேரிக்கு பரவி இருக்கிறது. அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு பரவுவதற்கு முன்பு, சம்பத்தப்பட்ட மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அங்குள்ள பெண்களை காப்பாற்ற முயலவேண்டும்.


m.arunachalam
பிப் 14, 2025 21:17

இது ஒன்றுதான் வழி . காவல்துறை சுததிரமாக செயல்பட முடியாத நிலை , நீதி மன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் மற்றும் காலதாமதங்கள் . உடனடியாக பதில் கொடுக்க வேண்டும் .


D Natarajan
பிப் 14, 2025 21:03

அந்த காமுகன் ஆசிரியரின் வீட்டை சூறையாட வேண்டும்


கந்தன்
பிப் 14, 2025 19:55

சூறையாட வேண்டியது பள்ளி அல்ல ஆசிரியரை