மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
23-Aug-2025
புதுச்சேரி: மகாராஷ்டிராவில், நடக்கும் தேசிய அளவிலான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மல்காபூரில் 32வது தேசிய சப் ஜூனியர் அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை(19ம் தேதி) துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 26 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி சார்பில், மாணவர் பிரிவில், சிவகிருஷ்ணன், தருண், ஹேமேஷ், ஆன்டரசன், வினுச்சரண், அனிஷ் உதயகுமார், குருகோல், பிரவின், நகுலன், ஆதித்யா, தினேஷ், நரேஷ், சிந்தாசாய் வினய வெங்கட ஸ்ரீராம் கார்த்தி, பிரிஜித் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாணவிகள் பிரிவில் பிரித்தியுஷா, வர்னிகா, அன்புமதி, லக்ஷனா, சிவசக்தி, காவியா, சிவலீலாவதி, விகாஷினி, சுஸ்மிதா, தாஷினி, கீதாலட்சுமி, லாவண்யா, லோசிமா, காவியா, சிந்தாஸ்ரீ துர்காலட்சுமி சண்முகபிரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற செல்லும் மாணவ, மாணவியர் அணிகளை அட்டிய பட்டியா சங்க செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். இதில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
23-Aug-2025