மேலும் செய்திகள்
ரூ.1 லட்சம் கடன் வாங்க 7.45 லட்சம் இழந்த பெண்
28-Jul-2025
புதுச்சேரி: அதிக லாப தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை, வீரபத்திரசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் ராமு மனைவி லட்சுமி. இவர், முருங்கப்பாக்கத்தில் நடத்தி வந்த ஜெராக்ஸ் கடையில், அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 2013ல் கடையை லட்சுமி காலி செய்துவிட்டார். இந்நிலையில், நாராயணன் அவரது நண்பரான முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர் இளஞ்செழியன் ஆகியோர். கடந்த 2016ம் ஆண்டு லட்சுமியிடம், ஆன்லைன் வியாபாரம் செய்ய உள்ளதாகவும், அதற்கு கடனாக பணம் கொடுத்தால், அதிக லாபத்தொகை திரும்ப கொடுத்து விடுவதாக கூறினர். அதனை நம்பிய லட்சுமி, பல்வேறு தவணைகளாக இருவரிடமும் ரூ. 48 லட்சம் கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து பணத்தை கேட்ட லட்சுமியை, இருவரும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். லட்சுமி அளித்த புகாரின் பேரில், நாராயணன், இளஞ்செழியன் ஆகியோர் மீது முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Jul-2025