ரவீந்திரநாத் தாகூர் வருகை: 97வது ஆண்டு விழா
புதுச்சேரி : அரவிந்தரை சந்திக்க ரவீந்திரநாத் தாகூர் புதுச்சேரி வருகை தந்த 97வது ஆண்டை முன்னிட்டு, அவரது படத்திற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மலர்துாவி மரியாதை செலுத்தினார்.ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தரை சந்திக்க கடந்த 1928ம் ஆண்டு மே 29ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார். இதனை போற்றும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் புதுச்சேரிக்கு வருகை புரிந்த 97ம் ஆண்டு வருகை விழா நடந்தது. புதுச்சேரி சுய்பரேன் வீதியில் உள்ள அலையேன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்க கூடத் தில் நடத்த விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து, லட்சுமி சந்திரா, ராபிந்தர் சங்கீத் குழு வினரின் இசை நிகழ்ச்சி, அரவிந்தர் ஆசிரம பள்ளி மாணவியின் நடன நிகழ்ச்சி நடந்தது. அரவிந்தரின் பக்தர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த அரவிந்தரின் ஆசிரம நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகி திபேந்து கோஸ்சுவாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.