உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராதா மாதவ கல்யாண மகோத்சவம் இன்று துவக்கம்

ராதா மாதவ கல்யாண மகோத்சவம் இன்று துவக்கம்

புதுச்சேரி : லாஸ்பேட்டையில், ராதா மாதவ கல்யாண மகோத்சவ நிகழ்ச்சி இன்று துவங்குகிறது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதியானது, மார்கழி அதிகாலை நடத்திய பஜனையின் நிறைவான, 'நாம சங்கீர்த்தனம் நாட்டியம்' நடந்தது. இதில், விவேகானந்தா பள்ளி, மாதா அமிர்தானந்தமயி பள்ளி, இ.சி.ஆர் சங்கர சங்கரவித்யாலயா பள்ளி, காந்தி வீதி சங்கரவித்யாலயா பள்ளி மற்றும் வாசவி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை 8:30 முதல் இரவு 9:00 மணி வரை லாஸ்பேட்டை, இ.சி.ஆர் சாலை, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், சிவதாஸ் பாகவதர் தலைமையில் அஷ்டபதி பஜனை மற்றும் நாம சங்கீர்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதையடுத்து, நாளை காலை 7:30 மணிக்கு உடையாளூர் கல்யாணராம பாகவதர் நிகழ்த்தும் உஞ்சவ்ருத்தி, 9:00 மணிக்கு ராதா மாதவ கல்யாண மகோற்சவம், 11:30 மணிக்கு மாங்கல்யதாரம், ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி