வானொலி நிலைய இசை கச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் சார்பில் ஏ.ஐ.ஆர்., ரைசிங் ஸ்டார்ஸ் சீசன் 01, என்ற தலைப்பில் இசைக் கச்சேரி இன்று நடக்கிறது. இளைஞர்களிடையே இசை ஆர்வத்தை துாண்டும் வகையில், இந்த நிகழ்ச்சி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இன்று (18ம் தேதி) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இசைப்பிரியர்கள் பார்வையாளர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என, புதுச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.