உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை விழா 

ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை விழா 

புதுச்சேரி: ராகவேந்திரா சுவாமிகள் ஆராதனை விழாவையொட்டி, பூர்வ ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ராகவேந்திரா சுவாமி மடம், புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ளது. இங்கு, ராகவேந்திரா சுவாமிகளின் 355வது ஆராதனை விழாவை, 3 நாட்கள் சிறப்பாக கொண்டாப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, முதல் நாள் விழாவான பூர்வ ஆராதனை விழா நடந்தது.  அதையொட்டி, நேற்று அதிகாலை நிர்மால்ய விஜர்சனம், மகா சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கனகாபிேஷகம், அலங்காரம், ஹஸ்தோதகம், ஸ்வஸ்தி இரவில் பல மந்த்ராட்ஷத்தை நடந்தது. நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்