உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில்வே மேம்பாலம் பணிகள் மந்தம்; கண்டமங்கலத்தில் பயணிகள் அவதி

ரயில்வே மேம்பாலம் பணிகள் மந்தம்; கண்டமங்கலத்தில் பயணிகள் அவதி

கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணிகள் மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் தினசரி அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிசாலை திட்டத்தில், விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான சாலை பணிகள் முடிந்துள்ளது. இதையடுத்து, கண்டமங்கலத்தில், ரயில்வே மேம்பாலத்திற்கு, இரும்பு பாலம் அமைக்கும் பணி, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதற்காக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல், போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.செப்டம்பர் 25க்குள் (நேற்று) பணிகள் முடிக்கப்பட்டு, பாலத்தின் ஒருபுறத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால், கட்டுமான பணி முடியாமல் இன்னும் நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் தினமும் 10 கி.மீ., தொலைவிற்கு மாற்றுப் பாதையில் சுற்றி சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.தற்போது, புதுச்சேரி மார்க்கத்தில் 30 மீட்டர் இடைவெளிக்கான கான்கிரீட் கட்டமைப்பு பணி முடிந்து, விழுப்புரம் மார்க்கத்தில் 15 மீட்டர் தொலைவுக்கான கான்கிரீட் கட்டமைப்பு பணி நடக்கிறது. இதனால், பாலம் பணி முடிய இன்னும் ஒரு மாதம் வரை ஆகும் என தெரிகிறது.

அக். 15க்குள் முடியும் 'நகாய்' அதிகாரி உறுதி

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய (நகாய்) திட்ட இயக்குநர் சக்திவேல் கூறுகையில், 'கண்டமங்கலம் மேம்பாலத்தில் இரும்பு பாலம் கட்டும் பணி ஒரு வாரத்தில் முடியும். பணி முடிந்ததும் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, 15 நாட்கள் இலகு ரக வாகனங்கள் மூலம் 'லோடு டெஸ்ட்' செய்து, ஒரு மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வரும் அக்டோபர் 15க்குள் பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு, பணிகளை செய்கிறோம். இந்த ரயில்வே பாலத்திற்கு போதிய இடவசதியின்றி உள்ளதால் பணி தாமதமாகிறது' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி