உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆய்வு

பாகூரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆய்வு

பாகூர்: பாகூர் பகுதியியில் மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், பருவ மழையை எதிர்கொள்ள துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று காலை பாகூர் பகுதியில் உள்ள முக்கிய நீர் நிலைகளான பாகூர் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, குருவிநத்தம் தென்பெண்ணையாறு சித்தேரி அணைக்கட்டு உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளை, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளனுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நீர் நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகள் துார்வாரப்பட்டுள்ளதா, மழை பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளின் விபரங்களை கேட்டறிந்தார்.ஆய்வின்போது, நீர்பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை