ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் காங்., கட்சியை வலுப்படுத்த வட்டார செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:புதுச்சேரி மாநில ராஜ்பவன் தொகுதியில் காங்., கட்சியினை வலுப்படுத்தும் பொருட்டு, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் மருது பாண்டியன் பரிந்துரையின் பேரில், வடக்கு வட்டார செயல் தலைவராக கணேஷ் நகரை சேர்ந்த சண்முகம், தெற்கு வட்டார செயல் தலைவராக குமரகுருபள்ளத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.