உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா

ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா

புதுச்சேரி : இந்திய குடிமைப் பொறியாளர்கள் கலந்தாய்வு கூட்டமைப்பு, புதுச்சேரி மையம், பொறியாளர்- 2024 சார்பில் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா தனியார் ஓட்டலில் நடந்தது. பொறியாளர்-2024 தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். இந்திய குடிமைப் பொறியாளர்கள் கலந்தாய்வு கூட்டமைப்பு, புதுச்சேரி மைய தலைவர் முருகன் தெய்வநாயகம் நோக்கவுரை ஆற்றினார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். புதுச்சேரி பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வீரசெல்வம் சிறப்புரை ஆற்றினார். இதில் ஜீவன் ரெடிமிக்ஸ் கான்கிரீட் விளம்பர விளக்கக்காட்சி நடந்தது. தொடர்ந்து, ராஜராஜ சோழனின் கட்டடக்கலை குறித்து பேச்சாளர் கவி முருகபாரதி, ராஜராஜ சோழனின் ஆளுமை குறித்து பேச்சாளர் சிவநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர், பொறியாளர்-2024 விருதுகள் மற்றும் விழா மலர் வெளியிடப்பட்டது. பொறியாளர்-2024 துணைத் தலைவர் வரதராஜன் நன்றி கூறினார். முன்னதாக ராஜராஜ சோழன் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி