உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் ராஜசந்துரு அறக்கட்டளை சார்பில் ' வி 3 ' மாணவர் வெற்றி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவிற்கு, ராஜசந்துரு அறக்கட்டளையின் நிறுவனர் ராஜ சந்துரு தலைமை தாங்கினார். இதில், கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 300 மாணவர்களுக்கு, பெற்றோர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, முத்தியால்பேட்டையை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு காஸ் அடுப்பு வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை