உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் நினைவு தினம்: காங்., மரியாதை

ராஜிவ் நினைவு தினம்: காங்., மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, காங்., சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் உள்ள அவரது சிலைக்கு, புதுச்சேரி காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் முன்னிலையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இளைஞர் காங்., சார்பில், ஜோதியை வழி அனுப்பி வைத்தனர்.நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், புதுச்சேரிக்கான அகில இந்திய காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், அகில இந்திய இளைஞர் காங்., செயலாளர் ஜோஸ்வா ஜெரால்ட்., மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங்., தலைவி நிஷா உட்பட பலர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில், ராஜிவ் உருவப்படத்திற்கு காங்., சார்பில், மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ