பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம்
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் இராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது.வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று 4ம் நாள் இராப்பத்து உற்சவம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மார்கழி மாதம் 30 நாட்களுக்கும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் தினமும் அதிகாலையில் வாசிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.