ரேஷன் கடை விவகாரம்: 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்ஸ்கோ நடத்தி வந்த ரேஷன் கடைகளை, அந்த நிறுவனம் தொடர்ந்து நடத்த வலியுறுத்தி வரும், 21ல், ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.பாக்கமுடையான்பட்டு, கார்ல் மார்க்ஸ் படிப்பகத்தில், ஏ.ஐ.டி.யூ.சி., பாப்ஸ்கோ ஊழியர் முன்னேற்ற சங்க பேரவை கூட்டம் நடந்தது.சங்கத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால அணுகுமுறை உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.இதில், பாப்ஸ்கோ நடத்தி வந்த ரேஷன் கடைகளை அந்த நிறுவனமே தொடர்ந்து நடத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்., 21ம் தேதி, குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன், காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் அபிஷேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.