உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனைக் கூட்டம்

 பிராந்திய நேரடி வரிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: வருமான வரித்துறையின் கீழ் இயங்கும் பிராந்திய நேரடி வரிகள் குறித்த ஆலோசனைக் குழு கூட் டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய அரசு வரி விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது. 2014க்கு பிறகு இந்தியாவில் வருமான வரி சீர்திருத்தங்கள் பொதுவாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இருவருக்கும் எளிமைப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் குறைந்த வரி விகிதங்களில் கவனம் செலுத்தியுள்ளன. அதில், தனிநபர் வருமான வரி நிவாரணம், தனிநபர் வரி செலுத்துவோருக்கான சீர்திருத்தங்களில் தள்ளுபடி வரம்புகளை அதிகரித்தல், ஜி.எஸ்.டி., 2.0 வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியின் ஒவ்வொரு வருமான வரி வட்டத்திலும் உள்ள அனைத்து வரி செலுத்துவோருடன் ஒரு முதற்கட்டக் கூட்டத்தை நடத்தி அதில் உள்ள பயனுள்ள பரிந்துரைகள் மற்றும் சிக்கல்கள் பரிசீலிக்கப் பட்டு பின், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்