உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம் நிதியுதவி வழங்கினார். மணவெளி, நோணாங்குப்பம் காமன் கோவில் வீதி சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது வீட்டில் கடந்த 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, முன்னாள் சபாநாயகர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினார். அரசு மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை