உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளம்பர ேஹார்டிங் அகற்றம்

விளம்பர ேஹார்டிங் அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா சதுக்கம் சிக்ன லின் வடமேற்கு பகுதியில், 70 அடி உயரத்தில், பி.ஆர்., ஏ.டி. மீடியாஸ் விளம்பர நிறுவனத்தின் விளம்பர ஹோர்டிங் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு விளம்பரம் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி காலாவதி ஆனது. இது, தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொ டரப்பட்டது. கோர்ட் உத்தரவுப்படி, விளம்பர பலகையை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் அகற்றி கொள்ள கடந்த ஜூன் மாதம் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு மூலம் கடிதம் அனுப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை பிரிவு அளித்த காலகெடு முடிந்தும், விளம்பர ஹோர்டிங் அகற்றப்படவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் விளம்பர பலகை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசராவ் தலைமையில் ஊழியர்கள் கிரேன் மூலம் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !