உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மிஷன் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுச்சேரி: மிஷன் வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை கடந்த 6ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு துறைகள் இணைந்து அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, நேற்று (10ம் தேதி) இ.சி.ஆர்., மடுவுபேட்- சிவாஜி சதுக்கம், அம்பலத்தடையார் மடம் வீதி- மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகள், வருவாய் பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அதில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் இரு புறத்திலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், பெயர் பலகைகள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. இன்று (11ம் தேதி) லாஸ்பேட்டை காமராஜர் மணி மண்டபம்- உழவர் சந்தை, கல்லுாரி சாலை, சின்ன சுப்பையா பிள்ளை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை